கடற்படையின் துணைத் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே நியமிக்கப்பட்டார்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

 இலங்கை கடற்படையின் துணைத்  தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே கடந்த முதலாம் திகதி முதல் நியமிக்கப்பட்டதுடன், இதற்கான நியமனக் கடிதத்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ 08.07.2026 அன்று கடற்படைத் தலைமையகத்தில் வைத்து, ரியர் அட்மிரல் புத்திக லியனகமகேவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். 

இலங்கைக் கடற்படையில் தனது சேவைக்காலத்தில் பல்வேறு பதவிகளை வகித்துள்ள ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, அதிவேகத் தாக்குதல் ரோந்துக் கப்பல்களின் கட்டளை அதிகாரியாகவும் இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் மற்றும் ஸ்தாபனங்களின் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் தற்போது வடக்குக் கடற்படைக் கட்டளையின் புதிய பிரதித் தளபதியாகவும் பொறுப்புத் தளபதியாகவும் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects