மகாவலி கங்கையை அண்மித்துள்ள பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் – நீர்ப்பாசனத் திணைக்களம்

அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் மகாவலி கங்கையை அண்மித்துள்ள பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

​இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (03.08.2026) நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளதுடன், அது நாளை (04.08.2026) நள்ளிரவு 12.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

​அதற்கமைய, மகாவலி கங்கையை அண்மித்துள்ள உடுநுவர, உடபலாத, யடிநுவர, கங்கஇஹல கோரள, பஸ்பாகே கோரள மற்றும் கங்கவட கோரள ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளுக்கு இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

​எனவே, அப்பகுதிகளில் மகாவலி கங்கையை அண்டியுள்ள மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கிலிருந்து பாதுகாத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

​எதிர்வரும் காலப்பகுதியில் மேலும் மழை பெய்யக்கூடும் என்பதால், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects