2026 பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற இலங்கை வீராங்கனை!

இந்தியாவின் ஒடிசாவில் நடைபெற்று வரும் 2026 ஆம் ஆண்டிற்கான World Athletics Silver Level Continental Tour 2026 பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் தில்ஹானி லேகம்கே வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இப்போட்டியில் அவர் 58.98 மீற்றர் தூரம் எறிந்து திறமையை வெளிப்படுத்தினார்.

இப்போட்டியின் தங்கப் பதக்கத்தை ஜூசிலீன் சேல்ஸ் டி லிமா (Jucilene Sales de Lima) வென்றார். அவர் 59.13 மீற்றர் தூரத்தை எட்டினார்.

வெண்கலப் பதக்கத்தை வென்ற இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அன்னு ராணி 56.96 மீற்றர் தூரத்தை எறிந்தார்.

இதேவேளை, இத்தொடரின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் சுமேத ரணசிங்க 80.29 மீற்றர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

மேலும் அறிய இணைப்பை அழுத்தவும்…👇👇


Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects