கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் ஓகஸ்ட் மாதத்தில் 8 சதவீதமாக அதிகரிப்பு!

கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் இந்த ஆண்டின் ஓகஸ்ட் மாதத்தில் 8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று (31.08.2026) வெளியிட்டுள்ள கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணிற்கு அமைவாக, ஜூலை மாதத்தில் 7.3 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்க வீதம் ஓகஸ்ட் மாதத்தில் 8 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், ஓகஸ்ட் மாதத்தில் உணவுப் பிரிவின் வருடாந்த பணவீக்க வீதம் 8.5 சதவீதம் வரை அதிகரித்துள்ளதுடன், ஜூலை மாதத்தில் அது 6.3 சதவீதமாகப் பதிவாகியிருந்தது.

எவ்வாறாயினும், உணவு அல்லாத பிரிவின் வருடாந்த பணவீக்க வீதம் ஓகஸ்ட் மாதத்தில் 7.7 சதவீதம் வரை குறைவடைந்துள்ளது. ஜூலை மாதத்தில் அவ்வீதம் 7.8 சதவீதமாகப் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects