மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நன்கொடையாளர் தின நிகழ்வு!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நன்கொடையாளர் தின நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரனின் தலைமையில், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளருமான கந்தசாமி பிரபுவின் பங்கேற்புடன் 12.10.2026 அன்று வைத்தியசாலையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

வைத்தியசாலையின் சுகாதார சேவைகளைச் சிறப்பாக வழங்குவதற்குத் தாராளமாகப் பங்களிப்புச் செய்த நன்கொடையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதுடன் அவர்களின் உயரிய சேவையைப் பாராட்டி சினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய வைத்தியசாலையின் பணிப்பாளர், “உலகின் பல நாடுகளில் உயர்தர சுகாதார சேவைகளைப் பணம் செலுத்தியே பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகிறது ஆனால் எமது நாட்டில் இத்தகைய தரமான மருத்துவ சேவைகளை மக்களுக்கு இலவசமாக வழங்க முடிவது நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விடயமாகும் என தெரிவித்தார்.

திறமையான மற்றும் அர்ப்பணிப்புமிக்க உத்தியோகத்தர்களின் பங்களிப்புடனேயே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இச்சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகின்றது.

இதன்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்டத்தில் சுகாதாரத் துறையை மேலும் மேம்படுத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவித்ததுடன் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுத்தர முயற்சிப்பதுடன் போதனா வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு மற்றும் ஆளணிப் பற்றாக்குறைகளை விரைவாக நிவர்த்தி செய்வதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மருத்துவ நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects