சர்வதேச கராத்தே போட்டியில் மூன்று தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்ற மட்டக்களப்பு சகோதரர்கள்!

மட்டக்களப்பைச் சேர்ந்த அனுருத்தன் மற்றும் ஜெயஸ்ரீராம் ஆகிய சகோதரர்கள் சர்வதேச கராத்தே போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்று இலங்கைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

17.10.2026 அன்று வென்னப்புவவில் அமைந்துள்ள சேர் அல்பர்ட் எப்.பீரிஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற SHINICHI SHIGEYOSHI CUP 2026 – INTERNATIONAL OPEN KARATE CHAMPIONSHIP சர்வதேச திறந்த கராத்தே போட்டியில் பங்கேற்ற இரு சகோதரர்களும், கட்டா (Kata) மற்றும் குமித்தே (Kumite) ஆகிய பிரிவுகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தி இச் சாதனையைப் படைத்துள்ளனர்.

இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் உள்ளிட்ட பங்களாதேஷ், பாகிஸ்தான், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில், அனுருத்தன் மற்றும் ஜெயஸ்ரீராம் ஆகியோர் பதக்கங்களை வென்றுள்ளனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects