தொடரும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வௌ்ளம் காரணமாக 2026 அழகியல் பாட செய்முறைப் பரீட்சைக்கு சமூகமளிக்க முடியாத மாணவர்களுக்கு வேறு ஒரு தினத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் அழகியல் பாட செய்முறை பரீட்சை இடம்பெறுகின்றது.
இந்த நிலையில், குறித்த பரீட்சைக்கு அனர்த்தங்கள் காரணமாக செல்ல முடியாமல் போயுள்ளதாக கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களை கொண்டு, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலைமை வழமைக்கு திரும்பியவுடன் குறித்த செய்முறை பரீட்சைக்கான வேறு ஒரு தினத்தை பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








