ஐந்து புதிய தூதுவர்களும் இரண்டு உயர்ஸ்தானிகர்களும் 17.11.2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.
அதன்படி,
1. கொரியக் குடியரசின் புதிய தூதுவராக Kim Youn-Jung
2. சுவிட்சர்லாந்தின் புதிய தூதுவராக Daniel Hunn
3. ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தூதுவராக Sylvia Hartleif
4. எகிப்து அரபுக் குடியரசின் புதிய தூதுவராக Ahmed El-Sayed Abdel Halim Amer Helal
5. லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசின் புதிய தூதுவராக Vithaya Xayavong
6. நமீபியா குடியரசின் புதிய உயர்ஸ்தானிகராக Alex L. Tukuhupwele
7. சிங்கப்பூர் குடியரசின் புதிய உயர்ஸ்தானிகராக Patrick Daniel
ஆகியோர் இவ்வாறு ஜனாதிபதியிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.
நற்சான்றுப் பத்திரங்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர், புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுடன் ஜனாதிபதி சிநேகபூர்வமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
இந் நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.














இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









