ஆரோக்கியமான நிலைக்குத் திரும்பிய நாட்டின் காற்றின் தரம்!

நாட்டின் வளிமண்டலத் தரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த இந்தியாவின் நச்சுப் புகை, வடகிழக்குப் பருவக்காற்றுடன் இணைந்து விலகிச் சென்றுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை (CEA) தெரிவித்துள்ளது.

சில பகுதிகளில் 200 என்ற அளவை நெருங்கியிருந்த காற்றின் தரச்சுட்டெண், இன்று 50 என்ற அளவுக்குக் குறைந்துள்ளது.

அதற்கமைய, மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் தொடர்ச்சியாகப் புதுப்பிக்கப்படும் நாட்டின் வளி தரச் சுட்டெண்ணின்படி, நாடு முழுவதும் காற்றின் தரம் ஆரோக்கியமானதாகக் கருதப்படும் அல்லது சுகாதாரத்துக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் மிகக் குறைவான நிலைக்கு வந்துள்ளது.

எவ்வாறாயினும், கொழும்பு மாவட்டத்தின் பத்தரமுல்ல பகுதியில் சிறியளவிலான காற்று மாசுபாடு, அதாவது வளித்தரச் சுட்டெண் 92 ஆக பதிவாகியுள்ளது.

அதேபோல், பதுளை – எல்ல பகுதியில் காற்று மாசுபாடு சற்று அதிகமான மட்டத்தில் காணப்படுகிறது. அங்கு வளித்தரச் சுட்டெண் 119 எனப் பதிவாகியுள்ளதுடன், அது சுகாதாரத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அளவாகும்.

கடந்த சில நாட்களாக நாட்டில் காற்று மாசுபாடு மிக அதிக மட்டத்தில் காணப்பட்டது. குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் பல நாட்களாக வளித் தரச் சுட்டெண் 200 வரை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects