இலங்கை மின்சாரத் துறையில் நவீனமயப்படுத்தப்படும் புதிய வேலைத்திட்டம்!

2027ஆம் ஆண்டில் மாதாந்தம் 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் 3 இலட்சம் மின்சாரப் பாவனையாளர்களுக்கு இலவசமாக ஸ்மார்ட் மின்மானிகள் வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் மின்சாரத் துறையை நவீனமயப்படுத்தும் நோக்கில், ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) 12 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன், இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தின் (LECO) சேவைப் பகுதிகளில் மாதாந்தம் 120 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் அனைத்து பாவனையாளர்களுக்கும் ஸ்மார்ட் மின்மானிகள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், குளியாப்பிட்டிய, பேராதனை, பத்தரமுல்ல மற்றும் தெஹிவளை ஆகிய பகுதிகளில் நான்கு மின்சார விநியோகக் கட்டுப்பாட்டு மையங்களை நிறுவுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மின்வெட்டு முகாமைத்துவத்தை மேம்படுத்துதல், மின்சாரக் கட்டமைப்பின் செயல்திறனை அதிகரித்தல், மின்சாரத் தேவையைச் சீராக நிர்வகித்தல் மற்றும் சூரிய மின்சக்தி உள்ளிட்ட பரவலாக்கப்பட்ட மின்சக்தி உற்பத்தி மூலங்களைத் தேசிய மின்கட்டமைப்புடன் இணைத்தல் ஆகியன இந்த மையங்களை அமைப்பதன் முக்கிய நோக்கங்களாகும்.

இந்தத் திட்டங்கள் மூலம் மின்சார விநியோகக் கட்டமைப்பின் திட்டமிடல் மற்றும் முகாமைத்துவத்தைத் தரவுகளின் அடிப்படையில் மேலும் மேம்படுத்த முடியும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டின் மின்சாரத் துறையை நவீனமயப்படுத்துவதில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தையும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects