வாகனம் ஒன்றை கொள்வனவு செய்து 14 நாட்களுக்குள் உரிமையை தங்கள் பெயருக்கு மாற்றாவிட்டால் 2000 ரூபாய் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த அனுருத்த தெரிவித்துள்ளார் .
வாகனம் ஒன்றை கொள்வனவு செய்யும் சிலர் நீண்ட காலமாக வாகனத்தின் உரிமையை மாற்றாமல் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வாகனங்களின் உண்மையான பதிவு உரிமையாளரை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் வேறு ஒருவரிடமிருந்து வாகனம் ஒன்றை கொள்வனவு செய்தால் அதை உடனடியாக அவரது பெயரில் பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇