இன்று இரண்டு மணித்தியாலங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறையினர்!

வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக சுகாதாரத் துறையினர் எதிர்கொண்டுள்ள கொடுப்பனவு குறைப்ப மற்றும் நிதி நெருக்கடிகளுக்குத் தீர்வு காணுமாறு வலியுறுத்தி, நிறைவுகாண் மருத்துவ மற்றும் துணை மருத்துவ சேவைகள் ஒன்றிணைந்த சம்மேளனம் இன்று (26.11.2026) நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை இரண்டு மணித்தியாலங்கள் அடையாள தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

அரசாங்கத்துடன் இணைந்து கடந்த 21ஆம் திகதி வழங்கப்பட்ட கடிதம் குறித்துத் தெளிவுபடுத்திய போதிலும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண எவ்வித சாதகமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அச்சம்மேளனம் தெரிவித்துள்ளது.

சுகாதார செலவுத் தலைப்பு மீதான விவாதத்திற்கு முன்னர் அரசாங்கம் தீர்வு வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும், பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் நோக்கமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, 2025 வரவு செலவுத் திட்டத்தில் நிறுத்தப்பட்ட அடிப்படைச் சம்பளத்தில் 1/20 பங்கான வார இறுதி மற்றும் விடுமுறை தினக் கொடுப்பனவுகளையும், 1/160 பங்கான மேலதிக நேரச் சேவைக் கொடுப்பனவுகளையும் உடனடியாக மீள நிறுவுதல், சுகாதார மற்றும் நிதி அமைச்சுக்களின் தொழில்நுட்ப அறிக்கைக்கு அமைய டெட் கொடுப்பனவிற்கு ஏற்ப விசேட கடமைக் கொடுப்பனவை அதிகரித்தல் மற்றும் வாழ்க்கைச் செலவிற்கு ஏற்ப சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்படும் வரை 25,000 ரூபா இடைக்காலக் கொடுப்பனவை வழங்குதல் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த அமைதியான போராட்டத்துக்கு பாதுகாப்பளிக்க பொலிஸ் மா அதிபரின் தலையீட்டையும், அதற்கான உத்தரவுகளையும் பிறப்பிக்குமாறு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சரிடமும் அச்சம்மேளனம் கோரியுள்ளது.

அத்தோடு வரவு – செலவுத் திட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருவதுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைக்குமாறும் அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects