இலங்கையின் வறிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் மீளெழுச்சித் திறன், சமூக உள்ளடக்கம் மற்றும் நலவாழ்வை மேம்படுத்தும் நோக்கில், 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் (ADB) ஒப்பந்தம் செய்துள்ளது.
அதன் அடிப்படையில், இரண்டு துணைத் திட்டங்களைக் கொண்ட இந்தத் துறைசார் அபிவிருத்தித் திட்டத்தின் முதலாவது துணைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
முதலாவது துணைத் திட்டத்தின் மூலம் சீர்திருத்தங்களுக்கான அடித்தளம் மற்றும் கொள்கை ரீதியான நடவடிக்கைகள் நிறுவப்படும்.
அதன் பின்னர், முதலாவது துணைத் திட்டத்தின் கீழ் இணக்கம் காணப்பட்ட கொள்கை நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதும், சீர்திருத்தங்களைப் பூர்த்தி செய்து உறுதிப்படுத்துவதற்காக இரண்டாவது துணைத் திட்டம் செயல்படுத்தப்படும்.
சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், பொருளாதார மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள் மற்றும் முதியவர்களுக்கான சமூகப் பராமரிப்புச் சேவைகளை மேம்படுத்துதல் ஆகியவை முதலாவது துணைத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








