மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின் 2024 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் எம். சோமசூரியம் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் 17.01.2024 அன்று இடம் பெற்றது.
இந் நிகழ்வில் ஆன்மிக அதிதிகளாக இராமகிருஸ்ண மிஷன் உதவிப்பொது முகாமையாளர் சுவாமி சுரார்ச்சிதானந்தா ஜீ மஹராஜ், அருட்தந்தை பிரைனர், மெளளவி எம்.வி.எம்.பிரிதொஸ் நலிமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
2024 ஆம் ஆண்டிற்க்கான புதிய கற்கை நெறிகளுக்கான மாணவர்கள் உள்வாங்கப்பட்டதுடன் அவர்களின் கற்கைகள் தொடர்பான தெளிவூட்டல்களும் இதன் போது வழங்கப்பட்டது.
1983 ஆம் ஆண்டு உப தொழில்நுட்பக் கல்லூரியாக தொழிற்பட்டு 1993 ஆம் ஆண்டு முதல் தொழில் நுட்பக் கல்லூரியாக தரமுயர்த்தப்பட்டு மட்டக்களப்பு பிராந்தியத்தில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பாரிய சேவையாற்றி வருவதுடன் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கு பெறுமதியான சான்றிதழ்களையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇