சீரற்ற காலநிலையுடனான மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் (23/01/2024) அன்று வழங்கி வைக்கப்பட்டது.
CITY OF BATTICALOA – UK ஏற்பாட்டிலும் அனுசரணையிலும் , தன்னார்வலர்களின் உதவியுடனும் மட்டக்களப்பு மாவட்ட கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பறங்கியாமடு பகுதியில் அந்த பிரிவின் கிராம சேவையாளரின் ஒத்துழைப்புடன் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை இனங்கண்டு இரண்டாம் கட்டமாக 100 குடும்பங்களுக்கான உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
CITY OF BATTICALOA – UK அமைப்பானது பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றமையும், முதற்கட்ட வெள்ள நிவாரணமாக கடந்த வாரம் கொம்மாதுறை மேற்கில் 56 குடும்பங்களுக்கான உலர் உணவு பொருட்களை வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇