ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மையில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு (09.02.2024) அன்று உதவி பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தன் மற்றும் கணக்காளர் திருமதி.டிலானி ரேவதன் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் லயன்ஸ் கழக தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இதன் போது மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் அனுசரணையில் இருபத்து மூன்று கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட 70 பயனாளிகளுக்கு குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇