இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையின் மூலம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள வாராந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் 77.9 சதவீத அதிகரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் சுற்றுலா வருமானம் 875 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தது.
கடந்த ஜூன் மாதத்தில் சுற்றுலா வருவாயாக 151.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதேநேரம் இந்த வருடத்தில் முதல் பாதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.01 மில்லியனாக பதிவாகியுள்ளது.
இது 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 61.7 சதவீதம் அதிகரிப்பாகும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇