சிறுபோகத்தில் ஏற்பட்டுள்ள பயிர்ச் சேதங்களுக்கு உடனடியாக நட்டஈட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.
இம்மாதம் பயிர்ச் சேதங்கள் பதிவாகியுள்ள பகுதிகளுக்கு இந்த இழப்பீடுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு விவசாயத்திணைக்களத்துக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
தற்போது பல பகுதிகளிலும் சிறுபோக அறுவடை நடைபெற்று வரும் நிலையில், அறுவடை நிறைவடைந்ததன் பின்னர் பயிர்ச் சேதத்திற்கான தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇