இவ்வருடம் நீர் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் உறுதியளித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், 2023 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் அண்மையில் நீர் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், முன்மொழியப்பட்ட நீர் கட்டண சூத்திரம் தொடர்பில் பரவி வரும் வதந்திகள் பொய்யானவை எனவும் தெரிவித்துள்ளார்.
“இந்த ஆண்டு நீர் கட்டண திருத்தம் இருக்காது என நான் உறுதியளிக்கிறேன், ஆனால் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை (NWSDB), ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் (ADB) இணைந்து கட்டண சரிசெய்தலுக்கான செலவு மீட்பு சூத்திரத்தை அறிமுகப்படுத்த உள்ளது,” என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇