தூங்குவதற்கு முன்பு கையடக்கத் தொலைபேசியில் வீடியோ பார்த்தால் மூளைப் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக அமெரிக்க புற்றுநோய் ஆராயச்சியாளர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் ஆராய்ச்சியாளர்கள், கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவது தொடர்பாக சமீபத்திய ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆய்வானது கையடக்கத் தொலைபேசிகளை அதிகமாக பயன்படுத்தும் 1,22,000 பேரிடம் நடத்தப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இவர்களில் 41 சதவீதமானோர் தினமும் தூங்குவதற்கு முன் தொலைபேசியைப் பயன்படுத்தும் நபர்களாகவும், 17.4 சதவீதமானோர் அந்த நேரத்தில் தங்கள் தொலைபேசியைப் பயன்படுத்துவதில்லை என்றும் கூறியுள்ளனர்.
இதேவேளை, குறித்த நேரத்தில் தொலைபேசிகளைப் பயன்படுத்தாதவர்களை விட, பயன்படுத்தியவர்களுக்கு தூக்கப் பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறியுள்ளனர்.
தொலைபேசி அல்லது பிற டிஜிட்டல் திரையிலிருந்து வெளியாகும் வெளிச்சம், மெலடோனின் வெளியீட்டை தாமதப்படுத்துகிறது. இதன் விளைவாக இயற்கையான தூக்கம் பாதிக்கப்படுகிறது.
தூக்கத்திற்கு செல்வதற்கு முன் 30 நிமிடங்கள் சமூக ஊடகங்களில் செலவிடுவதால், தூக்கக் கோளாறுகள் மற்றும் அமைதியற்ற தூக்கம் ஏற்படும்.
தூக்கமின்மை ஒரு நபரின் ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்நிலை தொடர்வதால் உடல் பருமன், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் மனச்சோர்வு என்பன ஏற்படும்.
மேலும் இப் பழக்கமானது மனித உடலின் உயிரியல் கடிகாரத்தையே சீர்குலைத்துவிடும்’ என்று ஆய்வறிக்கை கூறுகிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










