களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு Ultra Sound Scan இயந்திரம் கையளிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்ட களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு Ultra Sound Scan இயந்திரமொன்று வைத்தியசாலை பாவனைக்காக 03.06.2025 அன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

லண்டனில் வசிக்கும் மட்டக்களப்பைச் சேர்ந்த பேராசிரியர் செல்வா பங்கஜ் மற்றும் வைத்தியர் தர்ஷினி பங்கஜ் ஆகியோரால் நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட குறித்த இயந்திரம் அன்பளிப்பு செய்யப்பட்டது.

மட்டக்களப்பு மருத்துவமனை நண்பர்கள் அறக்கட்டளையின் (Friends of Batticaloa Hospitals Charity) சார்பில் வைத்தியர் காந்தா நிரஞ்சன் உள்ளிட்ட வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் K.புவனேந்திரநாதன், மகப்பேற்று நிபுணர் வைத்தியர் K.வசந்தராஜா மற்றும் பலர் கலந்துகொண்டு இயந்திரத்தினை கையளித்தனர்.

மேலும், இவ் இயந்திரத்தை பெற்றுக்கொடுக்க வைத்தியர் காந்தா நிரஞ்சனுடன் இணைந்து வைத்தியர் பாஸ்கரன் சபாபதிப்பிள்ளை, வைத்தியர் ராஜகோபால், அன்ரொனியா டேவிட் மற்றும் வைத்தியர் S.பகீரதன் ஆகியோர் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வியந்திரத்தின் மூலம் மகப்பேற்றுத் தாய்மாருக்கான சேவைகள், பெண்நோயியல் சம்பந்தமான சேவைகள், கருவள சிகிச்சை சேவைகள் போன்றவற்றை மிகத் துல்லியமாக முன்கூட்டியே கண்டறிந்து அதற்கான சிகிச்சை முறைகளை மேற்கொள்வதற்கு உதவுவதாக தெரிவிக்கப்பட்டது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects