இலங்கைக்கான 48 மாத நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் நான்காவது மதிப்பாய்வை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு 01.07.2025 அன்று நிறைவு செய்துள்ளது.
அதன் பிரகாரம், இலங்கைக்கு SDR 254 மில்லியன் அல்லது சுமார் US$ 350 மில்லியன் கிடைப்பதுடன், இந்த நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இதுவரை வழங்கப்பட்ட மொத்த நிதியுதவி US$ 1.74 பில்லியனாக உள்ளது.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு பிரதானி எவன் பெபஜோஜியோ இதை அறிவித்தார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










