சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினம் இன்று (01.10.2025) கொண்டாடப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையால் 1954 ஆம் ஆண்டில் சிறுவர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது,
இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையால் முதியோரை கௌரவிப்பதற்காக 1990 ஆம் ஆண்டில் முதியோர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த வருடம், “உலகை வழிநடந்த – அன்பால் போஷியுங்கள்” எனும் தொனிப்பொருளின் கீழ் இன்று (01.10.2025) சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. மேலும் ” தலைமுறை ஒன்றை உருவாக்கிய தலைமுறையைப் பாதுகாப்போம்”எனும் தொனிப்பொருளின் கீழ் இன்று சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் பல்வேறு விழாக்கள் மற்றும் செயல்பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
செப்டம்பர் 25 முதல் தேசிய குழந்தைகள் தின வாரம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், முதியோர் தினத்தை கொண்டாடுவதற்காக இன்று (01.10.2025) முதல் அக்டோபர் 7 வரை கொண்டாட்ட வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










