உலகம் முழுவதும் உள்ள தனது பல கோடி வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் (Apple) நிறுவனம் மிக முக்கியமான பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அதன் பிரகாரம், கூகுள் குரோம் (Google Chrome) பிரவுசரை பயன்படுத்துவதை விடுத்து, ஆப்பிளின் ‘சபாரி’ (Safari) பிரவுசரைப் பயன்படுத்துமாறு அந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் வாடிக்கையாளர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் ஆப்பிள் நிறுவனம், பழைய குரோம் பதிப்புகளைப் பயன்படுத்துவதால் பயனர்களின் தரவுகளுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக, பாதுகாப்பு அப்டேட்கள் (Security Updates) முறையாகக் கிடைக்காத பிரவுசர்கள் வழியாகச் சைபர் தாக்குதல்கள் நடத்தப்படலாம் எனத் தொழில்நுட்ப நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதன் காரணமாகவே, பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க ‘சபாரி’ (Safari) பிரவுசரே சிறந்தது என ஆப்பிள் விளம்பரப்படுத்தத் தொடங்கியுள்ளது.
வியப்பளிக்கும் வகையில், கூகுள் நிறுவனமும் கூடப் பழைய பதிப்பிலான குரோமைப் பயன்படுத்த வேண்டாம் என ஆப்பிள் பயனர்களை எச்சரித்துள்ளது.
சைபர் குற்றவாளிகள் உலாவிகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தித் தரவுகளைத் திருடக்கூடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










