சுவிட்சர்லாந்து தூதுவர் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியை சந்தித்தார்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிரி வால்ட் (Siri Walt), 10.03.2026 அன்று ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தியைச் சந்தித்தார்.

இந்நாட்டின் தற்போதைய பொருளாதாரம் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எழுந்துள்ள நிலைமை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

இலங்கையில் சுவிட்சர்லாந்து தூதரகத்தை நிறுவியதிலிருந்து 70 ஆண்டுகளில், இந்நாட்டின் இளைஞர்களின் தொழில் பயிற்சியை மேம்படுத்தல், வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் போன்ற சமூக மற்றும் கலாசாரத் துறைகளின் மேம்பாட்டிற்கு பங்களித்துள்ளது என்பதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, அந்த ஆதரவை மிகவும் பாராட்டுவதாகத் தெரிவித்தார்.

தூதுவர் கலாநிதி Siri Walt, நாட்டின் இளைஞர்களின் தொழில் பயிற்சியை மேம்படுத்தவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் தொடர்ந்து ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் முதல் செயலாளர் (அரசியல்) ஜஸ்டின் பைலட் (Justine Boillat) கலந்து கொண்டார்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects