விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சினால் இலங்கையில் பொதுமக்கள் அறிவியல் (Citizen Science ) எனும் எண்ணக்கருவை ஊக்குவிப்பதற்கான ஒரு நடவடிக்கையாக பொதுமக்கள் அறிவியல் கூடம்/ (Citizen Science Cell) நிறுவப்படவுள்ளது.
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தலைமையில் இதன் அங்குரார்ப்பண நிகழ்வு நாளை (17.03.2026) தலவத்துகொடவில் நடைபெறவுள்ளது.
குறிப்பாக “Clean Sri Lanka” திட்டத்திற்கு இணையாக, விஞ்ஞானத்திற்கும் சமூகத்திற்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் இந்த ‘பொதுமக்கள் அறிவியல் கூடம் சாதாரண மக்களிடையே விஞ்ஞானம் குறித்த ஆர்வத்தையும் தேடலையும் தூண்டுவதற்கும், புத்தாக்கம் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான பொதுப் பொறுப்பை வளர்ப்பதற்கும் உதவும்.
விதாத்தா (Vidatha) வள நிலையங்களின் வலையமைப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த ‘பொதுமக்கள் அறிவியல் கூடத்தை’ செயற்படுத்த அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இந்த நிகழ்வு, நிதி பங்களிப்பு வழங்கும் நிறுவனங்கள், தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் சுற்றுச்சூழல், கல்வி ஆகிய அமைச்சுகளின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










