இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்தியாவின் உப ஜனாதிபதி ஸ்ரீ சி.பி. ராதாகிருஷ்ணனுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை19.04.2026 அன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.
அலரி மாளிகைக்கு வருகை தந்த இந்திய உப ஜனாதிபதியை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் மிகுந்த கௌரவத்துடன் வரவேற்றதோடு, இந்தியாவின் உப ஜனாதிபதியாகப் பதவியேற்றமைக்காக திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்குத் தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இலங்கைக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவெனக் குறிப்பிட்ட இந்திய உப ஜனாதிபதி, இலங்கையில் தனக்கு வழங்கப்பட்ட சிறப்பான வரவேற்பு மற்றும் உபசரிப்புகளுக்காகத் தனது நன்றியினையும் இதன்போது வெளிப்படுத்தினார்.
இந்த சந்திப்பில் இந்தியத் தூதுக்குழு சார்பில் இந்திய மீன்பிடி, கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் எஸ்.பி. சிங் பாகெல், பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி கே. லக்ஷ்மன், கலாநிதி மேதா விஷ்ரம் குல்கர்னி, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளும்,
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்த்ரி, நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
(பிரதமர் ஊடகப் பிரிவு)






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









