ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெரிடேஜின் 2026/27 ரோட்டரி வருடத்திற்கான புதிய தலைவர் பதவியேற்பு விழா மட்டக்களப்பில் நடைபெற்றது.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான விழாவில் புதிய தலைவர் ரோட்டேரியன் சண்முகப்பாண்டியன் ஹரிபிரசாத் உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வின் போது, புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் புதிய அங்கத்தவர்கள் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டு அவர்களுக்குரிய சின்னங்கள் சூட்டப்பட்டன. மேலும், சிறப்பு அதிதிகள் கௌரவிக்கப்பட்டதுடன், கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான ரோட்டரி மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் குமார் சுந்தரராஜ் மற்றும் அவரது பாரியார் சாந்தலா குமார் ஆகியோர் முதன்மை அதிதிகளாக கலந்துகொண்டனர். இவர்களுடன் மாவட்ட செயலாளர் ரோட்டேரியன் இயன் இத்தமல்கொட, உதவி ஆளுநர் ரோட்டேரியன் ஜெயபாலன் கணேசன், முன்னாள் ஆளுநர் ரோட்டேரியன் டெல்வின் பெரேரா, முன்னாள் தலைவர் ரோட்டேரியன் க.நவநீதன் மற்றும் பல ரோட்டரி உறுப்பினர்களும் ரோட்டரி குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
தலைவர் ஹரிபிரசாத் கழகத்தின் தாக்கமிக்க சமூகச் சேவை பாரம்பரியத்தைத் தொடர உறுதியளித்ததோடு, இந்த விழா ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெரிடேஜின் சேவை மற்றும் தலைமைத்துவத்தின் புதியதொரு அத்தியாயத்தின் தொடக்கமாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டது.























இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










