நிலவும் மழை காரணமாக பல ஆறுகளின் நீர் மட்டங்கள் உயர்வு – நீர்ப்பாசனத் திணைக்களம்

நிலவும் மழை உடனான வானிலை காரணமாக பல ஆறுகளின் நீர் மட்டங்கள் உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

களு, நில்வளா, கிங், வலவ மற்றும் குடா கங்கை ஆகிய ஆறுகளின் நீர்மட்டமும், அத்தனகலு ஓயாவின் நீர்மட்டமும் உயர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிங் கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்ததைத் தொடர்ந்து பத்தேகம, தவலம, நாகொட மற்றும் வெலிவிட்டிய – திவிதுர ஆகிய பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நிலைமைகள் குறித்து நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்வள முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் எல்.எஸ்.சூரியபண்டார விளக்கமளித்துள்ளார்.

“மிக அதிக மழைவீழ்ச்சி கிங் கங்கையின் மேல் பகுதியான தெல்லவ பகுதியிலேயே பதிவாகியுள்ளது, இது சுமார் 160 மில்லிமீற்றாக பதிவாகியுள்ளது.

இந்த நிலையின்கீழ் கிங் கங்கை மற்றும் நிலவளா கங்கைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

குறிப்பாக நிலவளா கங்கையின் அக்குரஸ்ஸ முதலான கீழ்நிலைப் பகுதிகள் சிறிய அளவிலான வெள்ள மட்டத்தை எட்டும் நிலையை அடைந்துள்ளன.

அதேபோல் தவலம கீழ்நிலைப் பகுதிகள் மற்றும் பத்தேகமவை அண்மித்த பகுதிகள் சிறிய வெள்ள நிலைமை வரை தீவிரமடைந்துள்ளன.

குறிப்பாக நாகொட மற்றும் வெலிவிட்டிய – திவிதுர போன்ற மக்கள் வாழும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகள் பெருமளவில் நீரில் மூழ்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.

அதேபோல் களு கங்கையின் மில்லகந்த பகுதி மற்றும் அதன் கிளை ஆறான குடா கங்கையை அண்மித்த மில்லகந்த பகுதி சிறிய வெள்ள நிலைமைக்கு மிகவும் நெருக்கமான மட்டத்தில் உள்ளது.

குறிப்பாக புளத்சிங்ஹல, பாலிந்தநுவர போன்ற பகுதிகளின் தாழ்நிலப் பகுதிகள் ஏற்கனவே நீரில் மூழ்கும் அபாயத்தைக் கொண்டுள்ளன. அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம், குறிப்பாக தூனமலே பகுதியில் சிறிய வெள்ள நிலைமை வரை அதிகரித்துள்ளது.”

இதேவேளை மழை காரணமாக அலிகொடஆர நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் நுகேயாய கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த சுமார் 40 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட வீடுகளில் உள்ள நபர்களைப் பாதுகாப்பான மையங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை எல்ல – பசறை வீதியில் மாவுஸ்ஸாகொல்ல பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் அந்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மொனராகலை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரத்தினபுரி, நுவரெலியா, கேகாலை, காலி, கண்டி மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects