கொழும்பில் உள்ள விசும் பய உட்பட அரசாங்கத்திற்கு சொந்தமான பல கட்டிடங்களை உடனடியாக குத்தகை அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கஃபூர் கட்டிடம், தேயிலை அருங்காட்சியகம் மற்றும் டி.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள 3 ஏக்கர் இரண்டு காணிகளையும் குத்தகைக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் டபிள்யூ.எஸ்.சத்யானந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலீட்டாளர்களுடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தவிர நுவரெலியாவில் அமைந்துள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான மற்றுமொரு கட்டிடம் குத்தகைக்கு கொடுக்கப்பட்ட கட்டிடங்களில் ஒன்று.
இந்த கட்டிடங்கள் மற்றும் நிலங்கள் மேம்படுத்தப்பட்டு சுற்றுலா தலங்களாக திறம்பட பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தொல்பொருள் பெறுமதிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தனியார் துறை சேவைகளுக்காக கட்டிடங்கள் வழங்கப்படும் என செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇