யாழ் மாவட்டத்தில் திறக்கப்படவுள்ள பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகம் ஒரு சில வாரங்களில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்க ஏதுவாக பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன.

அதன் பிரகாரம், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கடந்த ஜனவரி  மாதம் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, கடவுச்சீட்டு அலுவலகம் அமைக்கப்படும் என்ற அறிவித்தலை விடுத்திருந்தார்.

அதன்போது, கடவுச்சீட்டு அலுவலகத்துக்காக மாவட்டச் செயலகத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தையும் அவர் பார்வையிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே, கடவுச்சீட்டு அலுவலகத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை யாழ்ப்பாணம் மாவட்ட குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் கடமையாற்ற தேவையான தமிழ் உத்தியோகத்தர்களை அரச திணைக்களங்களில் இருந்து தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை அண்மையில் கொழும்பில் இருந்து வருகைதந்த விசேட குழுவால் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects