சீரற்ற காலநிலையால் மூடப்பட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு தீர்மானம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, மேல், வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய, மற்றும் தென் ஆகிய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளை எதிர்வரும் 16 ஆம் திகதி மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் உள்ள 10,076 அதற்கமைய, 9929 பாடசாலைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அனர்த்தங்களுக்கு அதிகளவில் முகங்கொடுத்துள்ள வலையங்களை உள்ளடக்கிய 147 பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய ஊவா மாகாணத்தில் 26 பாடசாலைகளும், வடமேல் மாகாணத்தில் 6 பாடசாலைகளும், மத்திய மாகாணத்தில் 115 பாடசாலைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்படாது எனவும் அறிவித்தார்.

எதிர்வரும் 16 ஆம் திகதி மீண்டும் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படாத பாடசாலைகள் தொடர்பான விபரங்களை கீழே 👇

கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படாத பாடசாலைகள் தொடர்பாக வெளியான விபரம்

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects